Friday, September 3, 2010

தாய்...........


கன்னி மயில் நீயம்மா
செப்பு சிலை அழகம்மா
கட்டுடல் நீ கலைத்து
கருக்குடலை கரைத்து
எனக்கு உயிர் தந்த
தாயம்மா!
உன் கருவறையை
மைதானமாக்கி நான்
உருண்டு புரண்டோடி

உதைத்து விளையாட
என் விளையாட்டின்
வேகத்தை
நீ அறிந்து என்னை
இப்பூலோக மண் மீது
என் கால் பதித்த
அன்னை!

யாருமற்ற நேரத்தில்
நான் அழுத நேரம்
யாரடித்து நீ அழுதாய்
என்று கட்டி அணைத்தெனக்கு
அரவணைப்பு தந்து
நான் மழலை மொழி
பேச அதை
மொழி பெயர்த்து எனக்கு

அர்த்தங்கள் சொன்ன
மழலை
தோழியம்மா!

என் பிஞ்சு விரலோடு
உன் அஞ்சு விரல் கோர்த்து
நான் மெல்ல நடை போட
நீ அன்ன நடை போட்டாய்
என்னோடம்மா!

என்னில் பாசம் அது பொங்கி
பாலாக மாறி மார்பகத்தை மீறி
உன் சேலை நனைந்த
கதை எல்லாம் என்
உணர்வுக்குள் இன்றும்
உறைந்திருக்க
மீண்டும் உன் சேயாக நான்
பிறக்க வேண்டி
நீயே என் தாயாகும் வரம்

வேண்டும் என கேட்கிறேன்!

No comments:

Post a Comment