Friday, September 3, 2010

ஆண் பாவம்....

உறுதியற்ற உடம்பினிலே
வாடகைக்கு காற்றடித்து
பஞ்சினிலே நெஞ்சை தைத்து
ஐம்பொறிகளிலே பறித்தெடுத்து
கண்கள் என்ற இரண்டை வைத்து
காலாவதி தேதி வைத்து என்னை
வையகத்தே அனுப்பி வைத்தான்
இறைவன் என்று அன்று ஒருவன்!

இறைவனது விளையாட்டில்
என் வாழ்வின் வரலாற்றில்
வையகத்தில் பெண்ணொருத்தி
என் விழியிரண்டை பறித்து விட்டு
வஞ்சமற்ற நெஞ்சுக்குள் சொல்லாமல்
தான் நுழைந்தாள்!

வையகமும் தெரியவில்லை
பெண்ணகமும் புரியவில்லை
பூருவ சொந்த பந்தமென்று
இனியவளே தஞ்சமென்று நான்
கோடி கோடி கனவு கண்டேன்!

என் கனவை கலைத்து விட்டு
உயிரதையும் உரசி விட்டு அவள்
நினைவை மட்டும் நிலைக்க விட்டு
சென்று விட்டாள் என்னவளும்!

உறவு அவள் நினவாக துன்பம்
என் காதலியாய் காலத்தின்
வாசலிலே மீண்டும்......
கடவுளுக்காக காத்திருக்கிறேன்!

No comments:

Post a Comment