Friday, September 3, 2010

காத்திருப்பா கைக்குட்டையா...

பள்ளிக்கூடம் விட்டு
விடா மழையில் நனைந்து
புத்தகங்கள் குளிக்க...
பாதணியும் சறுக்க
ஆடிப்பாடி நடந்து
தலை முடியில் சிந்தும்
நீரை .........
தடவிப் பார்த்து மகிழ்ந்து
என் பாதணிகள் தெறிக்கும்
சேற்று நீருக்கு பயந்து
வெள்ளை நிற சீருடையை
மெல்ல கையால் பிடித்து
நடந்து வரும் போதினிலே!

அந்த பூவரச மரத்தடியில்
நிமிடங்கள் சில நின்று
இலை கழுவும் மழைத்துளியை
ஒரு துளியாய்.. சில துளியாய்
உள்ளங்கையில் ஏந்தி...

அதி வேக காற்றடிக்க கிளைகள்
ஆடும் போது இலைகள் சிந்தும்
பல துளிகளுக்கு மனம் உடனே
ஏங்கி
தொடரும் மழை பயணத்தில்!

வயல் வெளியின் வெள்ளத்தில்
கால் நனைக்க விரும்பி பின்
விரும்பாமல் மனம் திரும்பி
கையை நீரில் அலம்பி!

தோழமையின் விருப்பத்தில்
மெல்ல மனம் இரங்கி
வெள்ளத்தில் இறங்கி
நனையாமல் நனைந்து
ஓடிவரும் வெள்ளத்தில்
மிதந்தோடி வரும் சருகுகளை
இரு கைகளினால் அள்ளி!

இல்லை என்று தெரிந்தாலும்
வயலில் மீனை தேடினோம்
காகிதக் கப்பல் செய்து ஆசைகளை
ஏற்றினோம்!
முன் சென்ற கப்பலுக்கு பின்
மிதந்து சென்ற என் ஒற்றை
பாதணியை .......
பார்த்து நான் கண் கலங்கி....

வெள்ளத்தில் நடப்பதற்கு உள்ளம்
மிக நடுங்கி பின் தொடர முடியாமல்
மழைத்துளியோடு சிந்திய என்
விழித்துளியும் சேர்ந்து.....

வயல் மண்ணோடு கலந்து
தமிழ் வாசம் வீசும் என் கிராமத்து
மண் வாசனையை என்னாலும்
என் சக தோழமையாலும்
சுவாசிக்க முடியவில்லை இன்று!

எதிர் காலங்கள் காத்திருப்பா
கைக்குட்டையா தெரியவில்லை....
ஆனாலும்......
புரியவதில்லை என்றும்.....

விஷ வாயுவை நம் மண்ணுக்குள்
கலந்தவர் தான் யாரோ
கலப்பவர் தான் ஏனோ:-(

கண்ணுக்குள் நீ.....


குடகு மலையில் தவறி....
ஒஹெனக்கல்லில் ஓடி வந்து..
காவிரி ஆற்றில் விழுந்த உன்னை...
மலைகள்... ஏழு... கடல்கள் தாண்டி..
ஆழம் காணாத நயாகராவில் எட்டி
பார்த்து கண்டு பிடித்தேன்!

என் கண்ணுக்குள் நீயிருந்தாய்!

....காதல் கைதி.....

சின்ன பெண் உன்னை...
என் கண் என்னும் காப்பகத்தில்
வைத்து நான் காத்திருக்க!....
...காயங்கள் இல்லாமல் ரெத்தம்
நீ சிந்தி....

காரணம் நான் என்று அன்பினால்
கைது செய்து....

விடுதலைக்கு விண்ணப்பம்
காதலில் இல்லை என்று....
உன் இதயம் என்ற பெருஞ்
சிறையில்... நீ என்னை....

ஆயுள் சிறை வைத்தாய்!

மௌன வார்த்தை.....


நேரில் உன்னை பார்க்கும் போது
இதயம் இடம் மாற .....
உன் விழியில் என்னை பார்க்கும் போது
நிலை தடுமாற....
மூச்சு காற்று தூண்டும் போது....
தீ மேல் தீயாக ......

உன் விரல்கள் என்னை தீண்டும் போது
வியர்வை மழையாக.....

நான்கு இதழ்கள் சேர்ந்து பேசும் போது
மௌனம் மொழியாக....
நான் வார்த்தைகளை கோர்த்து பார்த்தேன்
அர்த்தம் பலதாக!

காதல் கனி!!!!!!

இதயம் உன்னை தேடி
துடித்து களைத்து இழைத்து
இளமை இழந்து...
...முதுமையின் இணைப்பில்
தனிமையில் நானிருந்து
நினைக்க நினைக்க....

கண்ணீரில் கரைந்து
இனிக்கிறது இப்போது.....

இளமையின் அணைப்பில்
தனிமையில் நீ கொடுத்த
காதல் கனி!

........இதழ்.......

நீ! புத்தகம் விரித்து
பத்திரமாய் இதழ்
அசைத்து....
உச்சரிக்கும்.. போது
வந்து விழும்....
வார்த்தை எல்லாம்
என் பெயர்
தான் ஆகியதா!

மீன் விழிகள்......


கணணி வலைக்குள்
மாட்டிக்கொண்டு
விழித்திருந்த கண்
விழிகள்... குழிகளாக..
விழி.. வெளிகளை
சுற்றியது.... கரு
வளையங்கள்!

விழிகளின் நிலையை
நிலைக் கண்ணாடி
காட்டிய போது.. மூடி
கொண்ட கரு விழிகள்
மூக்கு கண்ணாடிக்குள்
மாட்டிக்கொண்டது!

மீன் விழிகளே!
ஜாக்கிரதை....
ஏழு கடல்களும்
கணணி வலைக்குள்
அடக்கம்!

சற்கரைப்பெண்.....

செங்கரும்பு பிழிந்து
சிந்திய சாற்றில்
வெப்பம் கலந்து....
வெட்டி எடுத்த
கற்கண்டு சொற்
கொண்டு....
தித்திக்க தித்திக்க
நீ பேசி என்னை
உருக்கிய...
தேன்
தடவிய நிமிடங்கள்
மனதோடு
ஒட்டிக்கொள்ள
நான் கரைகிறேன்....
சற்கரை பெண்ணே...
உமிழ் நீரும்
இனிக்கும் உன்
பெயர் தினம்
சொல்லி!

.....குளிர்......

நான் குளிக்கும்
போது..
நீயும் சேர்ந்தே
குளித்தாய்!

மனம் குளிர....
நினைத்து
துடைத்தேன்
என் நெஞ்சை
உன்னை குளிர்
தாக்காமல்!

.பாதை....


நான் நடந்து
வரும் பாதையில்
கிடக்கும்
முட்களை உன்
பாதங்களால்
எடுத்து
சுவட்டை பதித்து
செல்கிறாய்
எனக்காக....
நம் வாழ்க்கை
பாதையில்!

அன்புக்கடல்.....


விழிக்குள் வீழ்ந்து
உயிருக்குள் மூழ்கி
நீந்த துடிக்கிறாய்- என்
அன்புக் கடலில்.....
துடுப்பு வலிக்க வலு
இருந்தால் ஏறி விடு
வாழ்க்கைப் படகில்..

காதல் விழி ......

மழை காற்றின் கை தடவிய
பூக்களிளினால்.......
என் விழிகள் தடவிய உன்
மேல் தடவ.......
உன்னுடல் பூக்கள் எனை
தீண்டி ...
என்னுடலுக்குள் பூத்த
உயிர்ப்பூக்கள்
உன்னுக்குள் ...எப்படி
மறுபடியும்... பெண்ணே!

காதல் மழை.......

காதல்நதி.......


காதல் நதியின்
முதுகில் பதிந்த
கால்த்தடங்கள்
பார்த்து பின்
தொடர்ந்தேன் ...
சங்கமிக்க!

கடலோடு அல்ல..
உன்னோடு!

இளநீர்...

நீருக்கும்
இளமை
உண்டுஎன
சொல்லி.....
சிந்திக்க
வைத்த
தென்னை

காதல்வரம்.....

கவிச் சிந்தனை
தான் எனக்கு!
காதல் சிந்தனை
உன்னை பார்த்து!

மண் குதிரை
பிடிக்கும் சிறு
வயதில்!
அதுவே எனக்கு
வாழ்க்கை என்றால்!

தாகம் தான்
எனக்கு....
கானல் நீர் தானா
அதற்கு!

சாகாவரம்
பெற்றதாம்
காதல்....
சாகும் வரமா
எனக்கு காதல்!

துடிக்கிறது இதயம்
உயிர்களுக்கு!
எனக்கு மட்டும்
வலிக்கிறது ஏனோ!

வலி தான் உன்
வரம் என்றால்
கண்ணே........
மீள வழி தேடாமல்
சாகிறேன்..
உனக்காக......என்
காதல் பெண்ணே!

விருந்து......

கூவி கூவி
இன்றைக்கு விடியல்
சொன்னேன் ஊருக்கு!

விடிந்து.....
கூவி கூவி வருகிறான்
ஊர்க்காரன் விரைந்து!

ஊர்க்கோழி எனக்கு......
யாரோடு விருந்தோ!
எந்த ஊரில் விருந்தோ!

.....தந்தை.....


தோள் மேல் சுமந்த பிள்ளை
தோள் மேல் வளர்ந்து
உற்ற தோழனாக ...
பெற்ற தந்தை!

ஊசித்துளையின்
விந்தையை அதிகம்
பேசாமல் சொல்வதும்
தந்தையின் வித்தை
தான்!
நினைத்து வியந்தேன்
தந்தையர் தினத்தில்!

காதல் பூ......


என் ஒற்றை ஜடை
பின்னலுக்குள் சிக்கி
நீயும் தவித்திருக்க......

உனைப் போல உரு
மாறி என் தோளோடு
விளையாடி.....
ஆண் வாசம் செய்கிறது
கூந்தலில் நீ சூடி விட்ட
மல்லிகைப் பூ......

..இனிக்கும் தமிழ்...


மெல்ல.. தமிழ் இனி
சாவதா!...... தமிழா!

என் வெல்லத்தமிழ்
படைப்பை காலம்
தின்று விடும் முன்பு
கொஞ்சமாய் உனக்கும்
தந்து விடுகிறேன்!

சுவைத்துப்பார்!

இது கசக்கும் தமிழ்
என்று வீசி விடாதே!

மரத்துகள்களால்
கோர்த்து வை!
பழந்தமிழ் இனிக்கும்
பிற்காலத்தில்!

செல்லத்தமிழ் வாழ்க!

ஆண் பாவம்....

உறுதியற்ற உடம்பினிலே
வாடகைக்கு காற்றடித்து
பஞ்சினிலே நெஞ்சை தைத்து
ஐம்பொறிகளிலே பறித்தெடுத்து
கண்கள் என்ற இரண்டை வைத்து
காலாவதி தேதி வைத்து என்னை
வையகத்தே அனுப்பி வைத்தான்
இறைவன் என்று அன்று ஒருவன்!

இறைவனது விளையாட்டில்
என் வாழ்வின் வரலாற்றில்
வையகத்தில் பெண்ணொருத்தி
என் விழியிரண்டை பறித்து விட்டு
வஞ்சமற்ற நெஞ்சுக்குள் சொல்லாமல்
தான் நுழைந்தாள்!

வையகமும் தெரியவில்லை
பெண்ணகமும் புரியவில்லை
பூருவ சொந்த பந்தமென்று
இனியவளே தஞ்சமென்று நான்
கோடி கோடி கனவு கண்டேன்!

என் கனவை கலைத்து விட்டு
உயிரதையும் உரசி விட்டு அவள்
நினைவை மட்டும் நிலைக்க விட்டு
சென்று விட்டாள் என்னவளும்!

உறவு அவள் நினவாக துன்பம்
என் காதலியாய் காலத்தின்
வாசலிலே மீண்டும்......
கடவுளுக்காக காத்திருக்கிறேன்!

காதல் சாவி?....


வண்ணத்துப் பூச்சிக்கு
விண்ணப்பம் போட்டு
இறக்கைகள் கோடி
வாங்கி வந்து....
நெஞ்சுக்குள் யாவையும்
கொட்டி வைத்து....

உயிரில்
இன்பப்பாரத்தை
சுமந்தபடி....
ஆசைத் தேரினில்
நான் அமர்ந்து...

இளமை வானிலே
பறந்து வந்து.....
காதல் தேசத்தின்
கனவுப் பயணத்தை
என் காதலி காதினில்
எடுத்துரைத்தேன்...

தன் காதல் கதவுக்கு
சாவி தொலைந்ததாய்...
என் காதினில் காதலி
கதை முடித்தாள்!

உனக்குள்.....


நான் விழவே
நீ சிரித்து
எழவே கை
கொடுத்தாய்!

அழவே நான்
இல்லை!
தொலைந்து
விட்டேன்
உனக்குள்!

இரவுச்சூரியன்....


தணல் மேல் விழுந்த
நீர்த்துளி போல்
என் மேல் விழுந்து
மறைந்து போனது...........
உன் மேல் வழிந்த
வியர்வைத்துளி!

விழிகள் திறந்து மெதுவாய்
பார்த்தேன்..

பகலை மறந்தேன் என்று
இதமாய் சொன்னது........
மேலிருந்து.....

இரவுச்சூரியன்!

மனைவி.......


என் வளைக்கரம்
உனை வளைக்க
எனக்கு இளக்கரம்
நீ கொடுத்தாய்...

உன் இடக்கரம்
நான் பிடித்து.. உன்
இடம் நானென
ஆகி விட்டேன்!

உறவுகள்.......


என் அன்பு வெள்ளத்தில் நீந்தி
மன வெள்ளத்தில் கல் எறிந்து
கண்ணீர் வெள்ளத்தில் கால்
கழுவி.....

நீர்க்குமிழிகளை கையில்
அள்ளிச்செல்லும் உறவுகளே
மீண்டும் வாருங்கள்....

பூமனம்...........

பூவாய் பூவையென்
பூமனம்...
பூவிதழில் வழிவது
உயித்துளி!

முள்ளும் இவளின்
ஓர் மனம்... உன்
நினைவால் வலிக்கும்
மனவலி!

இலையின் நரம்புகள்
முழுவதும்
என் நரம்பாய் ஓடுது
உன்னிடம்!

பூந்தாளாய் நீள்வது
என் கரம்....
உன்கரம் பூவை
பெற்றிடவே!

முத்து......


சங்குக்குள் சனித்து
என் நெஞ்சுக்குள் மிளிர்ந்து
தன்னுள்ளே என்னை
இழுக்கிறது....

நுரைகடல் கடந்த
கடல்படு திரவியமாம்
முத்து......

நிரந்தரி கதிர்!

............நீ...........


என்னை.....
நினைக்காதே மறந்து
விடுவாய்
தொடராதே நிழலாகி
விடுவாய்
தீண்டாதே கை விட்டு
விடுவாய்
கை பிடிக்காதே கைத்தடி
ஆகிவிடுவாய்
மடி சாயாதே சேயாகி
விடுவாய்
தோள் சாயாதே பொதியாகி
விடுவாய்............!

என் இதயத்தை மெதுவாய்
தொட்டுவிடு
என்னுயிராகி
.................விடுவாய் நீ!

நிரந்தரி கதிர்!

கண்ணீர்..........

உன்னோடு பேசும் நேரங்களில்
வெள்ளம் வந்து என் உள்ளம் நிறைக்கும்
உன் அன்பு மனதின் மடை திறந்து!

உன் தோளோடு சாயும் நேரங்களில்
விழிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும்
என் மனதின் அணை உடைந்து!

உன் மார்போடு தூங்கும் நேரங்களில்
என் கண்ணீரில் வெல்லம் கலந்திருக்கும்
நீயும் நானும் கலந்திருந்து !

நிரந்தரி கதிர்!

நிழல்...................

உனக்காக
காத்திருக்கும் தருணங்களில்
நொடிப்பொழுதும் நிமிடமாகி
மணிக்கணக்கும் மறந்து போக
உன்னோடு நான் பேசிக்கொண்டே
உன்னை எதிர்பார்த்திருப்பேன்.....

தொலைவில் வரும் உன்னைத்தொட்டு
ஓடிவரும்... முகில்தொடரும்
நிழல்கூட......
என்னைத் தொட்டு தாண்டும் போது
என் விழியில் விட்டுச்செல்லும்
உன் நிழலை! என்னுயிரே நீயென்று!

காதலிக்கு நான் .......

இதயத்தை திறந்தேன்
இருக்கை போட்டு கொண்டாய் !!

வலக்கை நீட்டி ,இடக்கை அணைத்து
வாழ்க்கை இதுவென்றாய்!!

துயில் கொள்ளும் என் விடிகாலை
விழித்தெழட்டும்! உன் காலடி ஓசை கேட்டு!
மடிசாயும் நொடிப்பொழுதுக்கு
ஆயுளையும் அடகு வைப்பேன் !

அன்புக்கு இணையாக
உயிர் போதுமா உனக்கு?
ஏழு சனனமும் வேண்டுமடி எனக்கு !

குயில் இனமடி நீ !
கூடு கட்டிக்கொள் !!
தந்து விடுகிறேன் என்னை மரமாக !

பிரிவென்றால் உன் ஆன்மாவோடு இணைவேன் !
தந்துவிடு ! மரணத்தை பரிசாக !!

உன் தலைமுடி சிந்திய ஒற்றைப்பூ !
போதும் என் கல்லறைக்கு !!
பிரம்மாவே!

படைக்கும் பிதாவே !
சாகா வரம் என் காதலிக்கு !!
மரணம் பயம் இல்லை
எனக்கு !

......நீறு..........

உன் கால் தடம்
பார்த்து நடந்த
போது.......
என் உள்ளங்கால்கள்
ஒற்றிக்கொண்ட

உன் திருவடி பதிந்த
குருமணல் துகள்களில்
பாதியை......

திருநீறாக
என் நெற்றியில்
இட்டுக்கொண்டு......

துடைத்துக்கொள்ளாமல்
வைத்துக்கொண்டேன்
மீதியை......
என் உடலோடு நீறாக!

புகை.........


உன் ஆயுளின் எல்லைக்கோட்டை
என் உள்ளங்கையில் கீறி
உன் உள்ளங்கையில் கொடுத்தான்
பிரம்மன்!

கையை பற்றிக்கொண்டே உயிருக்கு
தீயை பற்ற வைக்கிறாய் உன் வாயில்!
என் மனதை புகைய வைத்து!

உன் ஆயுள் கோட்டை முழுதாய் அழித்து
என் வாழ்க்கைப் பாதையை அணைக்கிறாய்
பாதியில் தீயால்!
நம் ஆசைகளை விறகாக்கி!

தாய்...........


கன்னி மயில் நீயம்மா
செப்பு சிலை அழகம்மா
கட்டுடல் நீ கலைத்து
கருக்குடலை கரைத்து
எனக்கு உயிர் தந்த
தாயம்மா!
உன் கருவறையை
மைதானமாக்கி நான்
உருண்டு புரண்டோடி

உதைத்து விளையாட
என் விளையாட்டின்
வேகத்தை
நீ அறிந்து என்னை
இப்பூலோக மண் மீது
என் கால் பதித்த
அன்னை!

யாருமற்ற நேரத்தில்
நான் அழுத நேரம்
யாரடித்து நீ அழுதாய்
என்று கட்டி அணைத்தெனக்கு
அரவணைப்பு தந்து
நான் மழலை மொழி
பேச அதை
மொழி பெயர்த்து எனக்கு

அர்த்தங்கள் சொன்ன
மழலை
தோழியம்மா!

என் பிஞ்சு விரலோடு
உன் அஞ்சு விரல் கோர்த்து
நான் மெல்ல நடை போட
நீ அன்ன நடை போட்டாய்
என்னோடம்மா!

என்னில் பாசம் அது பொங்கி
பாலாக மாறி மார்பகத்தை மீறி
உன் சேலை நனைந்த
கதை எல்லாம் என்
உணர்வுக்குள் இன்றும்
உறைந்திருக்க
மீண்டும் உன் சேயாக நான்
பிறக்க வேண்டி
நீயே என் தாயாகும் வரம்

வேண்டும் என கேட்கிறேன்!

காத்திருப்பா கைக்குட்டையா...

பள்ளிக்கூடம் விட்டு
விடாமழையில் நனைந்து
புத்தகங்கள் குளிக்க
பாதணியும் சறுக்க
ஆடிப்பாடி நடந்து
தலை முடியில் சிந்தும்
நீரை .........
தடவிப் பார்த்து மகிழ்ந்து

என் பாதணிகள் தெறிக்கும்
சேற்று நீருக்கு பயந்து
வெள்ளை நிற சீருடையை
மெல்ல கையால் பிடித்து
நடந்து வரும் போதினிலே

அந்த பூவரச மரத்தடியில்
நிமிடங்கள் சில நின்று
இலை கழுவும் மழைத்துளியை
ஒரு துளியாய்.. சில துளியாய்
உள்ளங்கையில் ஏந்தி

அதி வேக காற்றடிக்க
கிளைகள் ஆடும் போது
இலைகள் சிந்தும் பல
துளிகளுக்கு மனம் உடனே
ஏங்கி
தொடரும் மழை பயணத்தில்!

வயல் வெளியின் வெள்ளத்தில்
கால் நனைக்க விரும்பி
பின் விரும்பாமல் மனம் திரும்பி
கையை நீரில் அலம்பி!

தோழமையின் விருப்பத்தில்
மெல்ல மனம் இரங்கி
வெள்ளத்தில் இறங்கி
நனையாமல் நனைந்து
ஓடிவரும் வெள்ளத்தில்
மிதந்தோடி வரும் சருகுகளை
இரு கைகளினால் அள்ளி!

இல்லை என்று தெரிந்தாலும்
வயலில் மீனை தேடினோம்
காகிதக் கப்பல் செய்து ஆசைகளை
ஏற்றினோம்!

முன் சென்ற கப்பலுக்கு பின்னாலே
மிதந்து சென்ற என் ஒற்றை பாதணியை
பார்த்து நான் கண் கலங்கி
வெள்ளத்தில் நடப்பதற்கு உள்ளம்
மிக நடுங்கி பின் தொடர முடியாமல்
மழைத்துளியோடு சிந்திய என்
விழித்துளியும் சேர்ந்து.....

வயல் மண்ணோடு கலந்து
தமிழ் வாசம் வீசும் என்
கிராமத்து மண் வாசனையை
என்னாலும் என் சக தோழமையாலும்
சுவாசிக்க முடியவில்லை இன்று!

எதிர் காலங்கள் காத்திருப்பா
கைக்குட்டையா தெரியவில்லை....
ஆனாலும்......
புரியவதில்லை என்றும்.....
விஷ வாயுவை நம் மண்ணுக்குள்
கலந்தவர் தான் யாரோ
கலப்பவர் தான் ஏனோ:-(

காதல் பெண்......


உன்னை பார்த்த
மறு நொடியில்
என்னை நானே
நம்பவில்லை...

நானே தான் நானா
நான் அறிய......

கிள்ளி பார்த்தேன்
உன் கன்னங்களை!

மின்னல் வந்து
உயிரை தாக்கி
மீண்டும் பிறந்தேன்
ஒரு நொடியில்....

காதல் பெண்ணாய்
உன் மடியில்!

காதல் வாசம்.......

என் முகவரி என்ன
தேடி தேடி வந்து சேர்ந்தேன்
உன் வீட்டு வாசல்!

முற்றத்தை சுற்றிய உன்
செல்ல நாயோ என் தோளில்
பாய்ந்ததும் கடிக்கவில்லை....

முகத்தில் வைத்தது
நட்பு முத்தம்!

என் ......
மேல் வீசிய
உன்
காதல் வாசத்தால்!

காதலி?

காதலா?
நீ வைக்கும்
முதல் முத்தத்தால் -
என் இரத்தம் அதி
வெப்பமானால் -
உன் குழந்தைக்கு
தாயாவேன்!
என் உள்ளம் அது
வெப்பமானால்
உனக்கே நான்
தாயாவேன் .......

... காதலி?
காதலா?
நீ வைக்கும்
முதல் முத்தத்தால் -
என் இரத்தம் அதி
வெப்பமானால் -
உன் குழந்தைக்கு
தாயாவேன்!
என் உள்ளம் அது
வெப்பமானால்
உனக்கே நான்
தாயாவேன் .......

... காதலி?

மனம்......

இரவின் குளிரை
விரட்டியடித்து போர்வைக்குள்
உடல் சுருண்டு கிடக்க
...
என் நினைவலையில் சிக்கி
தவிக்கும் உன்னை பிடிக்க
நினைவோட.....

இரவின் வெளிச்சத்தில்
உன்னை மேய துடித்து
களைத்து இமைகள் விழி
மூட
ஆடை இன்றி தன்னந்தனியே
வெட்ட வெளியில் உனக்காக
காத்துக்கொண்டிருந்தது
என் மனம்!

கண்ணுக்குள் நீ.....

குடகு மலையில் தவறி....
ஒஹெனக்கல்லில் ஓடி வந்து..
காவிரி ஆற்றில் விழுந்த உன்னை......
...மலைகள்...
ஏழு...கடல்கள் தாண்டி.. ஆழம்
காணாத நயாகராவில் எட்டி
பார்த்து
கண்டு பிடித்தேன்!

மௌன...வார்த்தை....

நேரில் உன்னை பார்க்கும் போது
இதயம் இடம் மாற .....
உன் விழியில் என்னை பார்க்கும் போது
...நிலை தடுமாற...

மூச்சு காற்று தூண்டும் போது தீ
மேல் தீயாக ......

உன் விரல்கள் என்னை தீண்டும் போது
வியர்வை மழையாக.....

நான்கு இதழ்கள் சேர்ந்து பேசும் போது
மௌனம் மொழியாக.....
நான் வார்த்தைகளை கோர்த்து பார்த்தேன்
அர்த்தம் பலதாக!

காதல் கனி!!!!!!

இதயம் உன்னை தேடி
துடித்து களைத்து
இழைத்து
...இளமை இழந்து...
முதுமையின்
இணைப்பில்
தனிமையில் நானிருந்து
நினைக்க நினைக்க....

கண்ணீரில் கரைந்து

இனிக்கிறது இப்போது.....

இளமையின் அணைப்பில்
தனிமையில்
நீ கொடுத்த
காதல் கனி!